கரூர் காந்திகிராமம் தெற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி(45). இவரது மனைவி சின்னப்பொண்ணு (41). இந்த தம்பதிக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
பழைய துணிகளை வாங்கிக்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்த சுப்பிரமணி மதுவுக்கு அடிமையானார். தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் சுப்பிரமணி மனைவியுடன் தகராறு செய்வார்.
ஜூலை 28ஆம் தேதி இரவு வழக்கம் போல் சுப்பிரமணி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுப்பிரமணி கருங்கலை எடுத்து சின்னப்பொன்னுவின் தலை மீது வீசினார்.
இதில் சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயரிழந்தார். இந்த கொலையால் காவல் துறையினருக்கு பயந்து மதுபோதையில், சுப்பிரமணி தனது வீட்டிற்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சரக்கு வண்டியின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தான்தோன்றிமலை காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கணவனை கொன்ற மனைவி - குடும்ப தகராறு காரணமாக வெறிச்செயல்