ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவர்- மனைவி தூக்கிட்டு தற்கொலை! - etv news

கரூர் அருகே கணவரின் திருமணத்தை மீறிய உறவை கண்டித்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

கணவருக்கு கள்ளத்தொடர்பு - மனைவி தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Mar 28, 2021, 4:37 PM IST

கரூர் பரமத்தி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ். தோகைமலை அருகே உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் அகரம் கிராமம் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான மணிமேகலையை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு தனுசித்ரன் (6) விசித்ரன் (3) என இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராம்பிரகாஷ் தனது அண்ணன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு முற்றியது. இதில், ஆத்திரமடைந்த மனைவி தனது தந்தையின் வீட்டிற்கு சென்று சிலகாலம் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த தினங்களுக்கு சில முன்பு மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து வந்துள்ளார். ஆனால், ராம்பிரகாஷ் திருமணத்தை மீறிய உறவை மீண்டும் தொடர்ந்ததால் இருவருக்குமிடையே மார்ச் 27ஆம் தேதி மதியம் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், ராம்பிரகாஷ் தனது மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்து வெளியே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதனால், மணமுடைந்த மணிமேகலை மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, க.பரமத்தி காவல் நிலையத்தில் மணிமேகலையின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே இன்று மார்ச் 28ஆம் தேதி காலை வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மணிமேகலையின் உடலை பார்வையிட்டு உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், தற்கொலைக்கு காரணமாக இருந்த ராம்பிரகாசை கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.