கரூர்: வெள்ளியணை அருகே உள்ள சங்கனூரைச் சேர்ந்தவர் தனபால் (34). இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கு வெள்ளியணை வடக்கு தெருவை சேர்ந்த அண்ணாவி என்பவரது மகள் மோகனா (23) என்பவருடன் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி நான்கு வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியின் அக்கா அம்பிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெள்ளியணை வடக்கு தெருவில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த தனபால் தனது இரண்டாவது மனைவியை அம்பிகாவை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் அம்பிகா வீடு திரும்பவில்லை. மேலும் தனபால் தலைமறைவாகிவிட்டார்.
இதனை அடுத்து அன்பிகாவின் தாயார் காளியம்மாள் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட வெள்ளியணை போலீசார் அம்பிகா கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டதில் நேற்று (ஜீலை 03) மாலை வெள்ளியணை அருகே உள்ள நீர் இல்லாத விவசாய கிணற்றில் பிணமாக மீட்டனர்.
மேலும் அதே பகுதியில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தனது இரண்டாவது மனைவியை கொலை செய்து நடகமாடிய தனபால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டாவது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதை தட்டிக் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தாக்கியதில் அப்பெண் உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க:வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை - கணவர் கைது