திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் சமூக செயற்பாட்டாளர் முகிலனை இன்று தேச துரோக வழக்கில் கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது அவர், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனை பெற்றுவரும் கைதிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் இதுவரை அவர் அறிவித்தபடி நடக்கவில்லை. எனவே உடனடியாக முதலமைச்சர் அறிவித்தது போல் பத்தாண்டுகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து நீதிமன்றம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முகிலனை, காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். பின்பு முகிலன் காவல் துறை வாகனத்தில் ஏறும்போது முதலமைச்சர் பழனிச்சாமி ஊழலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பினார்.
இதையும் படிங்க: சமூக ஆர்வலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை