தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பேரிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் இன்று (ஜூலை.22) விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:
எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு: சுமார் ரூ.26 லட்சம் பறிமுதல்