ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன ஊழல் புகார்..4 நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட்!

author img

By

Published : Apr 12, 2022, 7:05 PM IST

கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படாத சாலை பணிகளுக்கு திமுக ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசுப்பணம் வழங்கி ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்திருந்த நிலையில், நான்கு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

கரூர்: கரூர் மாவட்ட பகுதிகளில் சாலை அமைக்காமலே சாலை அமைத்ததாகவும் ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த ஏப்.8,9 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்திருந்தார்.

அப்புகாரில் கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை உள்ளிட்ட நான்கு சாலைகள் அமைக்கப்படாமலேயே ஒப்பந்ததாரரான எம்.சி.சங்கர்ஆனந்தன், எம்.சி.சங்கர்ஆனந்த் இன்ப்ரா, கரூர் என்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனம் ஆகியோருக்கு ரூ.3 கோடிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் துணையுடன் பணம் வழங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று (ஏப்ரல் 12) சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைதுறை மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்ற நிலையில், நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலர் உத்தரவின் பேரில் கரூர் கோட்ட பொறியாளர் சத்தியபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன்சிங், கணக்காளர் பெரியசாமி ஆகிய நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் புகாரையடுத்து, நெடுஞ்சாலைத்துறையில் நான்கு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போடாத சாலைக்கு பணம் எடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.