கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மகிளிபட்டியில் உள்ள இரட்டை வாய்க்கல் கரை பகுதியிலுள்ள வேப்பமரம் ஒன்றில் இளைஞர் ஒருவர் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலை அடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர், உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதையடுத்து காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞர் கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கோவக்குளம் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது.
மேலும் அவருக்கு திருமணமாகி இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், இன்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊழல் குற்றச்சாட்டில் மனைவி கைது - மனமுடைந்த கணவர் தற்கொலை !