ETV Bharat / state

விரைவில் செய்தியாளர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் -அமைச்சர் உறுதி - கடம்பூர் ராஜூ

கரூர்: செய்தியாளர்களுக்கான நலவாரியம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ
author img

By

Published : Aug 10, 2019, 4:18 AM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், தமிழ்நாடு அரசினுடைய 27 துறைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பாக அரசு பொருட்காட்சி கரூரில் இன்று தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர்கள்

மேலும், இந்நிகழ்ச்சியில் 192 பயனாளிகளுக்கு ரூ. 1.75 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழ்நாடு அரசின் 27துறைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைப் பொழுதுபோக்காகக் கருதாமல் அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”, என வேண்டுகோள் விடுத்தார். மேலும், செய்தியாளர்கள் நலவாரியம் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு, நல வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது பணி நிறைவடைந்தவுடன் நல வாரியம் அமைக்கப்படும் எனக் கூறினார்.

Intro:செய்தியாளர் களுக்கான நல வாரியம் விரைவில் அமைக்கப்படும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கரூரில் பேட்டி.

Body:மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் தமிழக அரசின் 27 துறைகள் செயல்பாடுகள் குறித்து செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பாக அரசு பொருட்காட்சி இன்று துவங்கியது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சி விழாவை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்றனர் இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 192 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அமைக்கப்பட்ட அரசு துறை அரங்கங்களை பார்வையிட்டார்.

இது குறித்து செய்தியாளர் டம் தெரிவிக்கும்போது தமிழக அரசின் 27 துறைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நல திட்டங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்கங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது இந்த பொருட்காட்சி பொழுதுபோக்காக கருதாமல் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக கருதிப் ஒரு காட்சி அரங்குகளை பார்வையிடும் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் அப்போது செய்தியாளர் நலவாரியம் எப்போது செயல்படும் என்ற செய்தியாளர் கேள்விக்கு நல வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது பணி நிறைவடைந்தவுடன் நல வாரியம் அமைப்பது தொடர்பான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.