கரூர் மாவட்டம் அருகேயுள்ள புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் ரம்யா (19). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார்.
திருமணத்தை தாண்டிய உறவு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற இவர், தற்போது தான் வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் இவரது சகோதரர் நேற்று (ஆக.24) குடிபோதையில் ரம்யாவை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த ரம்யா இன்று (ஆக.24) அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கரூர் - திருச்சி ரயில்வே தடத்தில் வந்த சரக்கு ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரம்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரம்யாவின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலித்த இளைஞரைக் கைதுசெய்யக் கோரிய கர்ப்பமான சிறுமி; பூச்சி மருந்து உண்டு உயிரிழப்பு!