கரூர் மாவட்டம் தாந்தோணி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய மயிலிறகு அகாதமி மற்றும் அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்காக இலவச அரசுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகின்ற 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இது குறித்து மயிலிறகு அகாதமியை வழிநடத்தும் சிரஞ்சீவி கூறியபோது, "கிராமப்புறத்தில் குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கென இந்த இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் அரசுத் தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம். மேலும் முன்னதாக அரசுத் தேர்வுக்கு படித்துத்தேறியவர்களைக் கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.
மேலும், "இந்த அகாதமி மூலம், நூலக வசதி சட்டம் பற்றி தெரிந்து கொள்ளுதல், மாதம் ஒருமுறை மருத்துவரை அழைத்து உடல் நலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் போன்றவையும் நடத்தப்படுகிறது. எனவே மாணவ மாணவிகள் இதனைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அகாதமி மற்றும் அறக்கட்டளையின் மூலம் தன்னார்வ தொண்டர்கள் கலந்துகொண்டு நிதி உதவிகள் செய்துவருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: