கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திண்ணப்பா திரையரங்கு. அதன் எதிரே, அரசு காலனியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் கிளாஸ் ஒர்க் கடை நடத்திவருகிறார். ராஜமாணிக்கம் வழக்கம்போல் நேற்றிரவு தனது பணியை முடித்து கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை கரூர், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக ஆங்காங்கே கனமழை பெய்தது. மழையின் காரணமாக பூட்டியிருந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு காலையில் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதனையறிந்த பக்கத்து கடைக்காரர்கள் கரூர் நகர் காவல் துறைக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
பள்ளி, கல்லூரி, டெக்ஸ் தொழிலாளர்கள் வேலைக்கு வரும் முக்கியச் சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சுமார் 1 மணி நேரமாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவ்வழியாக வந்த வாகனங்களைப் போக்குவரத்து காவல் துறையினர் மாற்றுவழியில் திருப்பிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: ஏர்கலைப்பையுடன் வேட்பு மனு தாக்கல் செய்த விவசாயி!