ETV Bharat / state

பங்குத் தொகை தராத நிறுவன உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை - share market

கரூர்: தனியார் நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் பங்குத் தொகையைக் கொடுக்காமல் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் உரிமையாளருக்கு தமிழ்நாடு முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

உத்தரவு
author img

By

Published : Jul 31, 2019, 7:43 PM IST

கரூர் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசூர் குரூப் நிறுவன உரிமையாளர் கோபிநாத் என்பவர் ஏழு நபர்களுடன் இணைந்து 2011ஆம் ஆண்டு முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் பங்கு தொகையை முறையாக ஏழு பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்காமல் 1.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளார். இதனை எதிர்த்து இதர பங்குதாரர்களும் கொடுத்த புகாரின் பேரில் 2017ஆம் ஆண்டு கோபிநாத் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி, கோபிநாத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 8 ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Intro:பங்கு தொகை கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல்

தனியார் நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்குத் தொகையை கொடுக்காமல் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை - தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
Body:பங்கு தொகை கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல்

தனியார் நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்குத் தொகையை கொடுக்காமல் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை - தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசூர் குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் கோபிநாத் என்பவர் ஏழு நபர்களுடன் இணைந்து கடந்த 2011 முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்,

இந்நிலையில் நிறுவனத்தின் பங்கு தொகையை முறையாக ஏழு பங்குதாரர்களுக்கு பிரித்து கொடுக்காமல் 1.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக கடந்த 2017ஆம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது,

இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது,

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி குற்றம் நிரூபிக்கப் பட்டதை தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளரான கோபிநாத்திற்கு ஏழாண்டுகள் சிறை தண்டனையும் 8 ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.