நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பாஸ்டேக் திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பாஸ்டேக் முறை ஜனவரி 15 முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் அமலுக்கு வந்தது. இதனால் கரூர் மாவட்டத்தில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டிகோட்டை சுங்கச்சாவடியிலும் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை பெறாதவர்கள் அந்தந்த சுங்கச்சாவடி மையங்களில் பெற்றுக்கொள்ள தனி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆத்தாடி என்னா கூட்டம்... மதுப்பாட்டில்களை வாங்க போட்டிபோடும் மதுப்பிரியர்கள்