ETV Bharat / state

ஊழல் செய்தவர்கள் தண்டனை பெறலாம்; அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது - ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ! - Ezhuchi Manadu

E.R.Eswaran MLA: பெருந்துறையில் பிப்.4 ஆம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடக்க உள்ளதாக கூறிய ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ, ஊழல் செய்தவர்கள் தண்டனை பெறலாம் எனவும் உள்நோக்கத்துடனும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

E.R.Eswaran MLA Press meet
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 11:43 AM IST

ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர் சந்திப்பு

கரூர்: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், பிப்ரவரி 4ஆம் தேதி கொங்கு மண்டல எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்..

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று (ஜன.5) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.ம.சண்முகம், கரூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, கிழக்கு மண்டல இளைஞரணி செயலாளர் விக்னேஷ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கட்சியின் சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

'தீரன் சின்னமலை' பெயரை சூட்டுக: இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் கரூர் மாநகராட்சி சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாநகர புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை உடனடியாக துவக்க வேண்டும், கரூர்-திருச்சி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை மத்திய, மாநில அரசுகள் அகற்ற வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் நேரடியாக மணல் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, 'தீரன் சின்னமலை' பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிப்.4-ல் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், 'கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், பிப்.4ஆம் தேதி 'கொங்கு மண்டல எழுச்சி மாநாடு' நடைபெற உள்ளது. வள்ளி கும்மி ஆட்டத்தை ஒரு சில அமைப்புகள் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பிரம்மாண்டமான வள்ளி கும்மி ஆட்டம்: எனவே, சாதி ரீதியாக முத்திரை குத்தி எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பத்தாயிரம் பெண்கள் பங்கேற்று உலக சாதனை படைத்த முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில், இந்த மாநாட்டில் உலக சாதனை நிகழ்ச்சியாக, 12 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற உள்ளது' என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், 'திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடங்கவில்லை என்று வரும் செய்திகள் உண்மை கிடையாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சியை நோக்கி பயணிக்கும் திட்டம். ஆகவே, அது நம்முடைய நாட்டின் நடைமுறைக்கு சாத்தியம் அல்ல என குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில், தமிழகம் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர், தேர்தலின் வாக்குறுதியில், கங்கையும், காவிரியும் இணைக்கப்படும் என்று கூறினார். ஆனால், இன்றுவரை அதற்கான முயற்சியை எடுக்கவில்லை. 2019-ல் கோதாவரியை கொண்டு வந்து இணைப்போம் என்றனர். ஆனால், அதுவும் இன்றுவரை இணைக்கப்படவில்லை' என்றார்.

ஊழல் செய்தவர்கள் தண்டனை பெறலாம்; அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது - ஈ.ஆர்.ஈஸ்வரன்

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'ஊழல் செய்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் வரலாம். அதில் உண்மை இருந்தால் தண்டனை பெறலாம். அதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது; ஆனால், உள்நோக்கத்துடனும் மிரட்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருவது ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பதிலளித்தார். மேலும், 'கள் இறக்குவது' விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் என்பதால், கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும்' என்று கூறினார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடரும் - அமைச்சர் சிவசங்கர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.