கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த விவசாய சங்கப்பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், 'கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் தாலுகா, நெரூர் வடக்கு மல்லப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதிய மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு, உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
ஆற்று மணலே இல்லாத இடத்தில் மணல் குவாரி அமைக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தவறான ஆவணங்கள் கொடுத்த கனிமம் மற்றும் கண்காணிப்புத்துறை செயற்பொறியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:முறைகேடாக நடந்த பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்