கரூர் மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுவருகிறது. இப்பணியில் ஒடிசாவிலிருந்து தொழிலாளர்கள் குழுவினர் தங்கி கட்டடப்பணி செய்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் வழக்கம்போல் கட்டட பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின் கம்பியை மிதித்தார். இதில் சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தீண்டாமைச் சுவர் சம்பவம்: 3,000 பேர் இஸ்லாத்தை தழுவ திட்டம்!