ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ1.72 லட்சம் கரூரில் பறிமுதல் - கரூர் சட்டப்பேரவைத் தொகுதி

கரூர், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும்படை சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 72ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Election flying squads confiscated  1.72 lakh in Karur

author img

By

Published : Mar 7, 2021, 3:20 PM IST

கரூர்: கரூர் - ஈரோடு சாலை ஆத்தூர் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பார்த்தசாரதி குறுக்குத்தெரு எஸ்எஸ் நகரைச் சேர்ந்த சண்முகம் மகன் சிவபாலன் என்வரது காரை சோதனையிட்டனர்.

அதில், ரூ. 67 ஆயிரத்து 500 உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல, குளித்தலை வதியம் பிரிவு சாலையில் காலை 7 மணியளவில் பறக்கும் படையினர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த சுதாகரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதனை குளித்தலை வட்டாட்சியரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

Election flying squads confiscated  1.72 lakh in Karur
கரூரில் ரூ1.72 லட்சம் பறிமுதல்

நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்படும் பணத்தினை அரசு சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வருகிறது.

இதையும் படிங்க: செஞ்சியில் இயக்குநரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.