கரூர்: பசுபதிபாளையம் காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றியவர் பத்மசீலன் (52). இவர் கடந்த 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் 10 ம் தேதி இரவு காவல் பணியில் இருந்தபோது கரூர் மாவட்ட ஆட்சியர் சாலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காளியப்பன் ஊர் என்ற இடத்தில் சாலையோர கடை முன்பு உறங்கிக் கொண்டிருந்த முதியவரை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளார் . இச்சம்பவத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது காவலரை முதியவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த காவலர் பத்மசீலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நாகையகோட்டை சவரியார்பட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் என்ற பாண்டியை (54).கைது செய்தனர்.
இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது . இந்நிலைடியில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.நசீமாபானு வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, கொலை முயற்சிகுற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.100 அபராதமும், அபராதத்தைக் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.நசீமாபானு உத்தரவிட்டார்.
மேலும் காவலரை ஆபாசமாக திட்டியதற்காக 3 மாதங்கள் சிறைத்தண்டனையும் , மதுபோதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாத சிறைத்தண்டனையும் வழங்கி அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பட்டாபிராம் முத்துமாரியம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு - துரிதமாக மீட்ட காவல் துறை!