கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிகட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார் .
முன்னதாக, காலை 10 மணியளவில் கரூர் மாவட்ட மைய நூலகத்தைப் பார்வையிட்டு, மாவட்ட நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம், நூலகத்தின் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் பராசக்தி, தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் ரமணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.