ETV Bharat / state

சீட் பெல்ட் அணியாமல் காரில் வந்து சேட்டை செய்த குடிமகன் கைது - Drunken man arrested

கரூர்: குடிபோதையில் சேட்டை செய்த குடிமகனை போக்குவரத்து காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் ரகளையில் ஈடுபடும் குடிமகன்
author img

By

Published : Sep 26, 2019, 11:03 PM IST

தமிழ்நாடுஅரசின் உத்திரவுப்படி, மாநிலம் முழுவதும் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டு அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களை போக்குவரத்து காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் கரூர் நகர போக்குவரத்து காவலர்கள் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த சொகுசு கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது. இதையறிந்த போக்குவரத்து காவலர்கள் சினிமா பாணியில் காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.

குடிபோதையில் ரகளையில் ஈடுபடும் குடிமகன்

பின்னர் அவரிடம் விசாரித்த போது, நெரூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பதும், சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு காருடன் அழைத்து சென்ற காவலர்கள் அவருக்கு அபராதம் விதித்தனர். இதற்கு முன்னதாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:
கரூரில் கடும் குடிபோதையில் போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிய குடிமகன் ! நிருபர்களுக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் எச்சரிக்கை விட்டதோடு, குடிபோதையில் சேட்டை செய்த கூலித்தொழிலாளி கைது ?Body:
கரூரில் கடும் குடிபோதையில் போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிய குடிமகன் ! நிருபர்களுக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் எச்சரிக்கை விட்டதோடு, குடிபோதையில் சேட்டை செய்த கூலித்தொழிலாளி கைது ?

தமிழக அரசின் உத்திரவுப்படி ஆங்காங்கே தமிழக அளவில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டுகள் பொதுமக்கள் அணியுமாறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் ஆங்காங்கே கடுமையாக பரிசோதிக்கப்பட்டும் வரும் நிலையில், கரூர் நகர போக்குவரத்து காவலர்கள், பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அங்கே வந்த சொகுசு காரானது தாறுமாறாக ஓடியதோடு, அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனத்தின் மோதி விட்டு, தப்பி ஒட முயன்றவரை, போக்குவரத்து துறை காவல்துறை உதவி ஆய்வாளர் அண்ணாத்துரை, துரத்திபிடித்து சினிமா பாணியில், அவரையும், அந்த காரையும் பிடித்தனர். அப்போது., பாலசுப்பிரமணி என்பதும், நெரூர் பகுதியை சார்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் மீது குடிபோதையில் வாகனம் ஒட்டியது, சீட் பெல்ட் அணியாமல் ஒட்டியது, சாலைவிதிகளை கடைபிடிக்க தவறுதல் என்று வாகன வழக்குகள் 4 பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கரூர் நகர காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பாலசுப்பிரமணி, அங்கே போக்குவரத்து காவலர்களிடமும், வீடியோ எடுக்க முற்பட்ட செய்தியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.