கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தோகைமலை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (48). விவசாயியான இவர், தோகைமலை பகுதியை அடுத்த பாதிரிப்பட்டி மதுபான கடையில் மது வாங்கி வந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடைய கிணற்று மேட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்பொழுது அதிக போதையில் நிலைத் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். இந்த நிலையில் அவர் உயிர் இழந்துவிட்டார்.
விழுந்தவரின் உடலை பொதுமக்கள் கயிறு கட்டி எடுத்து குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
தற்பொழுது உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனையிலுள்ள உடற்கூறாய்வகத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தோகைமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: