கரூர் அரவக்குறிச்சி அருகே இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பனிமூட்டம் காரணமாக முன்னே சென்ற லாரியின் மீது மோதியதில் சம்பவ இடத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு லங்கில்பேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜான்சன் ரபின் (27) சேலத்தில் உள்ள பிரபல போத்தீஸ் துணிக்கடை நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார்.
![அரவக்குறிச்சியில் பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் டிரைவர் பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-high-way-road-accident-pothys-car-death-crime-news-pic-scr-tn10050_31122021093404_3112f_1640923444_303.jpg)
இதனையடுத்து, போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TN30 BL 109 என்ற எண் கொண்ட ஆம்னி வாகனத்தில் நிறுவனத்தின் மேலாளரை அழைத்துக்கொண்டு மதுரைக்குச் சென்றுள்ளார்.
![அரவக்குறிச்சியில் பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் டிரைவர் பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14065019_k.jpg)
அதன்பின்னர் மதுரையிலிருந்து சேலம் நோக்கி வந்தபோது கரூர் அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை ஈசநத்தம் பிரிவில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் இருந்த காரணத்தினால் எதிரே சென்ற லாரியின் மீது வேகமாகச் சென்று கார் மோதியதில் சம்பவ இடத்தில் ஜான்சன் ரபின் உயிரிழந்தார்.
![அரவக்குறிச்சியில் பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் டிரைவர் பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-high-way-road-accident-pothys-car-death-crime-news-pic-scr-tn10050_31122021093404_3112f_1640923444_773.jpg)
இந்நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற அரவக்குறிச்சி காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காரினுள் சிக்கி உயிரிழந்தவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்ள அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: மரகத லிங்கத்திற்கு இவ்வளவு மதிப்பா?