ETV Bharat / state

நாய்க்கு நீதி வேண்டி திரண்ட ஊர் மக்கள்..! - பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

கரூர்: தெரு மக்களே பாசமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொன்ற நகராட்சி நிர்வாகத்தினைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

நாய்க்கு நீதி
author img

By

Published : Sep 13, 2019, 7:37 PM IST

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில் ரமேஷ் என்கின்ற நாயை, சின்னதம்பி என்பவர் வளர்த்துவந்தார். இந்நிலையில் அந்த தெருவில் உள்ள அனைவரது வீட்டிலும் நன்கு பழகிய ரமேஷ் இரவு நேரத்தில் திருடர்களை அண்டவிடாமல் தெரு மக்களைப் பாதுகாத்துவந்தது.

இந்நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் நாயின் தொல்லை அதிகளவில் இருப்பதாகக் கரூர் நகராட்சியிடம் புகார் அளித்த நிலையில், இன்று அந்த நாயினை நகராட்சி ஊழியர்கள் வேட்டை துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொன்றனர்.

ஆசை, ஆசையாய் வளர்த்த நாயினை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாசமாய் பழகிய நாயைக் கொல்ல தூண்டியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி நாயின் சடலத்தோடு அப்பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாய்க்கு நீதி வேண்டி திரண்ட ஊர் மக்கள்

மேலும், இச்சம்பவத்தினால் அந்த பகுதி வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகள் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டது. பின்பு காவல் துறையினரும், அதிமுக நிர்வாகிகளும் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு நாயின் சடலம் சாலையிலிருந்து எடுக்கப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மனிதனைத் தாக்கிவிட்டுச் சென்றாலே கண்டு கொள்ளாத உலகில், நாய் மீது கொண்ட பாசத்தினால் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலைமறியல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:
கரூரில் தெருமக்களே பாசமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொன்ற கரூர் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பொதுமக்கள் திடீர்Body:
கரூரில் தெருமக்களே பாசமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொன்ற கரூர் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல் – பிரியாவிடை பெற்று மக்களின் அழுகுரலுடன் எடுத்து சென்ற நாயின் பிணம்
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில், ரமேஷ் என்கின்ற ஒரு நாயை., அதே பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வளர்த்து வரும் நிலையில், அந்த தெருவில் அனைவரது வீட்டில் நன்கு பழகிய நிலையில், அனைவருக்கும் அந்த நாய் பழக்கமாகியுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருடர்களை அண்டவிடமால், வந்த வழியே துரத்தும், இந்த நல்லகுணம் குண்ட நாயை அதிகம் நேசிப்பவர்கள் தான் அதிகம், இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த, ஒருவர் கரூர் நகராட்சியிடம் புகார் அளித்தும், அது அடிக்கடி குழைப்பதாக கூறிய நிலையில் இன்று அந்த நாயினை நகராட்சி ஊழியர்கள் வேட்டை துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளனர். ஆசை, ஆசையாய் வளர்த்த நாயினை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாசமாய் பழகிய நாயை கொல்ல தூண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி அந்த பகுதி மக்கள் திடீரென்று குப்பை லாரிகளை மறித்தும் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவத்தினால் அந்த பகுதி வழியாக செல்லும் பள்ளி கல்லூரி வாகன பேருந்துகள் தேங்கின. பின்பு காவல்துறையினரும், அ.தி.மு.க நிர்வாகிகளும் வந்து சமரச பேச்சுவார்த்தை எடுத்த பின்பு நாயின் சடலம் எடுக்கப்பட்டு, பின்னர் கலைந்து சென்றனர். இந்த காலத்தில் மனிதனை தாக்கி விட்டு சென்றாலே, கண்டு கொள்ளாத உலகில், நாய் மீது கொண்ட பாசத்தினால், நாயை சுட்டுக்கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூடிய சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலைமறியல் மிகவும் வரவேற்பைபெற்றுள்ளது
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.