ETV Bharat / state

10 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராயபுரத்தை கைப்பற்றியது திமுக! - கிருஷ்ணனராயபுரம் (தனி)

கரூர் மாவட்டம் கிருஷ்ணனராயபுரம் (தனி) தொகுதியை 10 ஆண்டுளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது.

DMK WON KARUR KRISHNARAYAPURAM, dmk, admk
10 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராயபுரத்தை கைப்பற்றியது திமுக
author img

By

Published : May 7, 2021, 3:30 PM IST

Updated : May 10, 2021, 2:29 PM IST

கரூர்: கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் இத்தேர்தலில் திமுக கைப்பற்றி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ள திமுக, பத்தாண்டுகளுக்கு பின் கிருஷ்ணராயபுரம் தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. இதனால் அதிமுக தனது ஹாட்ரிக் வெற்றியை இங்கு பறிகொடுத்தது.

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:

மொத்த வாக்காளர்கள்: 2,12,937

பதிவான வாக்குகள்:1,79,194

தபால் ஒட்டுகள்- 1708

ஓட்டு எண்ணிக்கை - 14 சுற்றுகள்

திமுக- சிவகாமசுந்தரி - 96,540 (வெற்றி)

அதிமுக - முத்துக்குமார் - 64,915(தோல்வி)

வித்தியாசம்: 31,625 வாக்குகள்

10 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராயபுரத்தை கைப்பற்றியது திமுக

மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:

  • நாம் தமிழர் - இலக்கியா - 9,706
  • தேமுதிக - கதிர்வேல் - 1946
  • மக்கள் நீதி மய்யம் - சரவணன்- 1848
  • நோட்டா - 1177

கட்சி வாரியாக முந்தைய வெற்றி நிலவரங்கள்:

  • கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியாக அறிவிக்கபட்ட பின்னர் 1971ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக திமுக சார்பில் சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றார்.
  • அடுத்து நடைபெற்ற 1977ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சுந்தரபாண்டியன், அதிமுகவுக்கு தாவி அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
  • 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தங்கவேல்ராஜ் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்
  • 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்ககிரி ராஜ் அதிமுகவுக்கு தாவி அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
  • 1989,1991 தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றது.
  • 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக வெற்றிபெற முடியாததற்கு காரணம், அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் இத்தொகுதியில் கணிசமான வாக்கு வங்கியை அதிமுகவுக்கு உருவாக்கி வைத்திருந்தார்.
  • 1984, 1989, 1991 என மூன்று தேர்தலில் ஹாட்ரிக் வெற்றிபெற்று கிருஷ்ணராயபுரம் தொகுதி வைத்திருந்த அதிமுகவிடம் இருந்து 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் நாகரத்தினம் வெற்றி பெற்றார்.
  • அதன் பின்னர் 2001இல் அதிமுக, 2006இல் திமுக, 2011இல் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மீண்டும் திமுக வெற்றி

கிருஷ்ணனராயபுரம் திமுக எம்எல்ஏ சிவகாமசுந்தரி

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இருந்த கீதா அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் சிவகாமசுந்தரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்று தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியை தன்வசம் வைத்திருந்த அதிமுக, இரண்டாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தொகுதியை கைப்பற்றியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்ற நிலையில், கிருஷ்ணராயபுரம், கடவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரமதர் மோடி வாழ்த்து

Last Updated : May 10, 2021, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.