கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அப்பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டார். அரவக்குறிச்சி தொகுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழியூர், ரெட்டியார்பாளையம், குப்பம்பாளையம் மற்றும் பெரிய திருமங்கலம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்தார்.
அப்போது, பொதுமக்களிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகையில், தமிழ்நாட்டில் அடிமை அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழரின் உரிமையை அடகு வைத்து விட்டனர். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்களவைத் தேர்தலில் ஜோதிமணிக்கு ஓட்டு போட்டதுபோல், எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள். நொய்யல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். திருப்பூர் சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.