அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக வட மாநிலங்களில் கலவரங்களும் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக கரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு திமுக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மத்திய நகர கழக செயலாளர் கனகராஜ், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, கட்சியின் நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டுனர். இதில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!