ETV Bharat / state

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பிரமுகருக்கு நேர்ந்த கொடுமை - கரூர் மாவட்ட திமுக செய்திகள்

அதிமுகவில் ஒன்றிய செயலாளராக இருந்து தற்போது திமுகவி்ல் இணைந்த கடவூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவரை பங்கேற்க விடாமல் திமுகவினரே தடுத்த சம்பவம் கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பிரமுகருக்கு நேர்ந்த கொடுமை

author img

By

Published : Jul 10, 2021, 8:57 PM IST

கரூர்: கடவூரில் திமுகவினரை சந்திக்கச் சென்ற ஊராட்சி ஒன்றிய சேர்மன் செல்வராஜை திமுகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றிய செயலாளர்

அதிமுகவின் கடவூர் ஒன்றிய செயலாளராகவும், கடவூர் ஊராட்சி ஒன்றிய சேர்மனாகவும் இருந்தவர் செல்வராஜ். சமீபத்தில் அக்கட்சியிலிருந்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சார துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி ஏற்பாட்டில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதையடுத்து கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டி பகுதியில் திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக கூட்டம் ஒன்றை செல்வராஜ் இன்று (ஜூலை 10) ஏற்பாடு செய்திருந்தார்.

அனுமதியின்றி வாழ்த்து கூட்டம்

திமுகவின் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர் அனுமதியின்றி இந்தக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கூடிய திமுகவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர், கூட்டத்துக்கு வருகை தந்த செல்வராஜின் காரை வழிமறித்து சாலையில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒன்றிய பொறுப்பாளர் இல்லாமல் கூட்டத்தை நடத்த அனுமதிக்க முடியாது என கோஷங்களை எழுப்பியதால் செல்வராஜ் தனது காரில் மாற்று வழியில் சென்று அங்கிருந்து வெளியேறினார்.

அந்தப் பகுதியில் தனிக்காட்டு ராஜாவாக அதிமுகவில் வலம்வந்த செல்வராஜை, திமுகவினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புரிஞ்சவன் புரிஞ்சுக்கோ தெரியாதவன் தெரிஞ்சுக்கோ- நயினாரை சீண்டிய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.