கரூர்: அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மூன்று லட்சத்து 19 ஆயிரத்து 814 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 கிலோ அரிசி வீதம் 1,279 டன் அரிசியை கரூர் மாவட்ட திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் விநியோகம் செய்கின்றனர்.
உதயநிதி வருகை
இதை திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி நாளை மாலை கரூருக்கு வருகைபுரிந்து பயனாளிகளுக்கு வழங்கவுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
தொண்டர்கள் உற்சாகம்
அப்போது,பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவியை கொண்டுசொல்ல வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜி அறிவுரை வழங்கியுள்ளார். தேர்தலுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினராக, உதயநிதி கரூர் வருகைதர இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மேட்டூர் அணையில் இருந்து இன்று நீர் திறப்பு!