ETV Bharat / state

’அதிமுகவுக்காக செயல்படுகிறார் ஆட்சியர்’: எம்எல்ஏ., செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

author img

By

Published : Jan 24, 2021, 3:12 AM IST

கரூர்: கட்சி சேலை கட்டாத அதிமுக காரராக ஆட்சியர் மலர்விழி செயல்பட்டு வருகிறார் என திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

MLA senthil balaji
எம்எல்ஏ செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ’இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்தோடு வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி முடிவடைந்தது.

சட்டப்படி அவர்களை பிற பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால் கரூரில் தேர்தல் விதிக்கு மாறாக 20ஆம் தேதிக்கு பின்னர் வீட்டில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர்களை அரசு வாகனத்தை அனுப்பி அழைத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தியுள்ளார்.

அக்கூட்டத்திலிருந்தவர்களிடம் கரூரில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். அதற்காக எவ்வித உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன் என ஒரு மாவட்ட ஆட்சியர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய சில அலுவலர்களை கடுமையாக பேசியதுடன், தனது பேச்சை கேட்டு நடக்க விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் விருப்ப இடமாறுதல் வாங்கி செல்லலாம் என்றும் மிரட்டியுள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் அதிமுகவினர் கொடுத்த பட்டியலை வைத்துக் கொண்டு வாக்காளர்களை நீக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மேற்கொண்டு வருகிறார்.

கட்சி சேலை கட்டாத அதிமுக காரராக ஆட்சியர் மலர்விழி செயல்பட்டு வருகிறார். ஒரு தலைப்பட்சமாக ஆளும் கட்சிக்கு சாதகமாக, சட்ட விரோதமாக நடந்துகொள்வதை மாவட்ட ஆட்சியர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லும் நிலைமை ஏற்படும்.

கரூரில் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுவிடலாம் என அதிமுகவினர் நினைக்கும் கனவு பலிக்காது. சட்டவிரோதமான செயல் யார் செய்தாலும் திமுக வேடிக்கை பார்க்காது. அவர்கள் சட்டப்படி தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது’

இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.

இதையும் படிங்க:முடிந்ததா அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.