ETV Bharat / state

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியுமா- திமுக - DMK candidate Monjanur Ilango

கரூர்: பிரதமர் மோடியின் பிரநிதியான அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலையால் பெட்ரோல் விலையைக் குறைக்க முடியுமா என்று திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ  அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்  அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பாஜக குறித்து பேச்சு  திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தேர்தல் பரப்புரை  DMK candidate Monjanur Ilango election campaign
DMK candidate Monjanur Ilango election campaign
author img

By

Published : Mar 29, 2021, 1:59 PM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வேட்டமங்கலம் ஊராட்சி சேமங்கி, மரவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, குந்தாணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நொய்யல் சேகர், மதிமுக மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தனர்.

அப்போது, திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ பேசுகையில்," எனது தந்தை மொஞ்சனூர் ராமசாமி அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பத்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். நானும் ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினராக பத்தாண்டுகள் பணியாற்றியிருக்கிறேன்.
அடிப்படையில் நான் பொறியியல் படித்த பட்டதாரி என்றாலும், எனது முழு நேர வேலை விவசாயமும் அரசியலும் தான். உங்களின் அடிப்படை பிரச்சினைகள் என்ன என்பதை நான் முழுமையாக அறிவேன்.

பரப்புரையில் பேசும் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ

என்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மோடியின் பிரதிநிதி, அவரால் தற்போது உயர்த்தி வரும் கேஸ், பெட்ரோல் விலையை குறைக்க முடியுமா. உங்கள் குறைகளை போக்குவதற்கு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைய வேண்டும். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், நொய்யல் பகுதியில் உங்களை அடிக்கடி சந்திக்கும் வகையில் புதிய சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பேன் என வாக்குறுதியளித்தார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் இலவச மாஸ்க் தரமுடியாத அரசு, வாஷிங்மெஷின் இலவசமாகத் தருமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.