ETV Bharat / state

கரூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - கரூர் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

கரூர்:2020ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

draft voter list
draft voter list
author img

By

Published : Dec 24, 2019, 9:35 AM IST

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கரூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டார்.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 47 வாக்காளர்களும், 4 லட்சத்து 44 ஆயிரத்து 758 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 60 பேர் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 865 வாக்காளர்கள் உள்ளனர். 1031 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

மேலும் இன்று முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இந்த வாக்காளர் வரைவு பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் . ஜனவரி 4, 5ஆம் தேதிகளிலும் மற்றும் 11, 12ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.

ஜனவரி 1ஆம் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்கவும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Intro:2020ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்Body:2020ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

கரூர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி கரூர் கிருஷ்ணராயபுரம் குளித்தலை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 47 வாக்காளர்களும் 4 லட்சத்து 44 ஆயிரத்து 758 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 60 பேர் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 865 வாக்காளர்கள் உள்ளனர். 608 வாக்குச்சாவடி அமைவிடங்கள் அமைக்கப்பட்டு அதில் 1031 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது 2020 ஆம் ஆண்டுக்கான  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இன்று முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இந்த வாக்காளர் வரைவு பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் மேலும் வரும் ஜனவரி நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளிலும் 11 மற்றும் 12 தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது .வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். 01.01.2020 ஆம்  தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அளிக்கவும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.இறுதிக்கட்ட வாக்காளர் வரையறு பட்டியலை பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என கூறினார்.

பேட்டி – அன்பழகன் - கரூர் மாவட்ட ஆட்சியர் Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.