ETV Bharat / state

100 ஆண்டு சுவையோடு திகழும் வெள்ளியணை அதிரசம்!

author img

By

Published : Nov 10, 2020, 8:11 PM IST

கரூர்: தலைமுறை தலைமுறையாக அதிரசத் தயாரிப்பில் ஈடுபட்டு புகழ்பெற்ற வெள்ளியணை கோபால் குடும்பத்தினர், கரோனாவால் மிகவும் பாதித்திருந்த நிலையில் தற்போது தீபாவளிக்கு அதே சுவையோடு அதிரசத் தயாரிப்பில் மும்முரமாகியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.

sweet
sweet

100 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளியணை கிராமத்தில் வசித்த கோபால் என்பவர், பச்சை அரிசி, அச்சு வெல்லம் கொண்டு வீட்டிலேயே தயாரித்து அதிரச விற்பனையில் ஈடுபட்டுள்ளார். மிகவும் சுவை மிகுந்த அந்த அதிரசம், சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் பிரபலமானது. இதனால் பலரும் அங்கு வந்து அதிரசம் வாங்கிச் சென்றனர். பின்னர், 1960 ஆம் ஆண்டு வெள்ளியணை கடை வீதியில், தனது மகன் ராமு பெயரில் அதிரசக்கடை திறந்தார் கோபால். அதுவே தற்போது 4 ஆவது தலைமுறையாகவும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.

நாளடைவில் அண்டை மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் பரவத் தொடங்கிய அதிரசத்தின் தனிச்சுவைக்கு, இப்பகுதியின் தண்ணீர் மற்றும் கை பக்குவமே, முக்கிய காரணம் என்கின்றனர் கோபால் குடும்பத்தினர். பச்சரிசியை ஊர வைத்து அரைத்து, விறகடுப்பில் அச்சு வெல்லத்தை பாகாக்கி அதில் ஏலக்காய், சீரகம் கலந்து, செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் இந்த அதிரசங்கள் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

100 ஆண்டு சுவையோடு திகழும் வெள்ளியணை அதிரசம்!

தற்போது பண்டிகைக்காலம் என்பதால் கரூர் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் உள்ளிட்டவற்றிலிருந்தும் வந்து மொத்தமாக இங்கு அதிரசம் வாங்கிச் செல்கின்றனர். கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தபோதும் அதிரசத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இவர்கள், சென்ற ஆண்டு நாளொன்றுக்கு 5,000 அதிரசம் தயாரித்த நிலையில், தற்போது 2,000 அதிரசங்கள் மட்டுமே விற்பனையாவதாக கூறுகின்றனர்.

தீபாவளி என்றாலே அதிரசத்திற்கு தனி இடமுண்டு. ஆனால் அதிரசத்திற்கே தனி இடமாக வெள்ளியணை கிராமம் விளங்குவதாக இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 7 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட திரையரங்குகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.