கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அதற்கான பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
![Covid 19 postive](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-01-bjp-annamalai-cocid19-postive-news-pic-scr-tn10050_11042021091703_1104f_1618112823_644.jpg)
அண்ணாமலையுடன் தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினர் பாஜக நிர்வாகிகள் இதனால் கலக்கமடைந்துள்ளனர்.
அண்ணாமலைக்கு ஆதரவாக அமித்ஷா
![அண்ணாமலைக்கு ஆதரவாக அமித்ஷா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11360906_as.jpg)
இவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கரூர் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேட்பாளருக்கு எதிரான பணி; எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் நீக்கம்