கரூர் மாவட்டத்தில் மே 16ஆம் தேதி காலை நிலவரப்படி புதிதாக 58 பெண்கள், 91 ஆண்கள் என மொத்தம் 149 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை நிலவரப்படி புதிதாக 347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 300 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அதேசமயம் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு 11 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.
இதில் கடந்த மே 1ஆம் தேதி முதல் இன்று (மே.16) வரை சுமார் 4 ஆயிரத்து 275 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதில், இரண்டு வாரங்களில் மட்டும் 73 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இன்று காலை புதிதாக 149 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 766ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கரூரில் 3 லட்சம் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!