கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியில் அரசு தொழில் நிறுவனம் இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுவினர் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் 3,000 முகக்கவசங்கள் தயாரிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அது அனுப்பப்பட வேண்டும், இதனால் குறைந்த அளவில் லாபம் கிடைத்தாலும் போதும் என்று அப்பெண்கள் கூறினர்.
இதன் மூலம் கரோனா வைரஸ் கட்டுப்படுத்துப்பட்டு தமிழ்நாடு முந்தைய நிலைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்பதால், இப்பணியை இடைவிடாமல் செய்து வருகின்றோம் எனவும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க... முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனையா? - இந்த எண்ணிற்கு கால் செய்யுங்கள்