கரூர் நகர் பகுதியில் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே 10 ஆம் தேதி கம்பம் நடுதல் தொடங்கி பூச்சொரிதல், காப்புக்கட்டுதல், பால்குடம், தீச்சட்டி, தேர்பவனி என மே 27 ஆம் தேதி வரை 17 நாட்களாக விசேஷமாக நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணமாக இந்தாண்டு இக்கோயிலின் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் கூறுகையில், லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழா மூலம் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி கோவில் திருவிழா அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்கு வராமல் வீட்டில் இருந்தப்படியே அம்மனை பிரார்த்தனை செய்து மஞ்சள் நீர் கும்பத்தில் வைத்து வேப்பிலை சொருகி, இளநீர் வைத்து மாவிளக்கு தேங்காய், தயிர் சாதம் படையல் உடன் அம்மனை வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.