கரூர் மாவட்ட அதிமுக சார்பில் 1 லட்சம் குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களாக, மளிகை சாமான் வழங்கும் பணி, கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழங்க தனியார் திருமண மண்டபத்தில் வாகனங்கள் மூலம் ஏற்றப்பட்டு, அனுப்பி வைக்கும் பணியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
பின்பு மண்மங்களம் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு சமூக இடைவெளியில் மக்களை நிற்க வைத்து அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கினார். இதில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம்: சுகாதாரத் துறை விரிவான அறிக்கை