நாடு முழுவதும் உள்ள நீட் பயிற்சி மையங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. அதன்பேரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் நடந்த சோதனையில் 100 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதைபோல் தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், பெருந்துறை, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
வெள்ளி வியாபாரியிடம் 15 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளி பறிமுதல்!
இந்த சோதனையில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதை அலுவலர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து இரவு நேரத்திலும் சம்பந்தப்பட்ட பயிற்சி மைய உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடு, பினாமிகள் வீடு, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை ரூ. 30 கோடி அளிவிற்கு ரொக்கம், ஆவணங்களைக் கைப்பற்றியுள்ள வருமான வரித்துறையினர் மீதமுள்ளவற்றை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோல் கரூர் மண்மங்கலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.