ETV Bharat / state

பிரிவினைக்கு தமிழ் மண்ணில் இடமில்லை - எம்பி ஜோதிமணி - தமிழ்நாட்டை ஏன் குறிவைக்க வேண்டும்?

ஒரு மாநிலம் பிரிக்கப்பட வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள், பாஜக முடிவுசெய்ய முடியாது என கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

பாஜக மீது குற்றச்சாட்டு
பாஜக மீது குற்றச்சாட்டு
author img

By

Published : Jul 11, 2021, 7:00 AM IST

Updated : Jul 11, 2021, 9:32 AM IST

கரூர்: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பாஜக குறித்து தனது ட்விட்டர், முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மோடி ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் கடும் கோபத்தை திசைமாற்றவே பாஜக இந்த கொங்குநாடு கருத்தாக்கத்தை கையில் எடுத்துள்ளது.

தமிழ்நாட்டை அழிக்க துடிக்கும் பாஜக

தமிழினம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான மொழி, வரலாறு, பாரம்பரியம் உடையது. அதை அழிப்பதற்கு பாஜக துடிப்பது நாம் அறிந்ததே. கீழடியிலிருந்து செம்மொழி ஆய்வு மையம் வரை உதாரணங்கள் குவிந்துகிடக்கின்றன.

தமிழ்நாடு மக்கள் அன்பை, ஒற்றுமையை, அமைதியை, உழைப்பை, சுயமரியாதையை, தைரியத்தை நம்புகிறவர்கள். ஆகவே பாஜக; ஆர்எஸ்எஸ்-ஆல் தமிழ்நாட்டை மதவெறி, வெறுப்பு அரசியலால் வெல்ல முடியவில்லை. அழுத்தத்திற்கும் தமிழ்நாடு பணியவில்லை. ஆகவே இப்போது புவியியல் ரீதியாக தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த மோடி

தொழில்வளர்ச்சியில் கோலாய்ச்சிய கொங்கு மண்டலம் மோடி ஆட்சியில் உருக்குலைக்கப்பட்டது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ் டி, தொழிலுக்கு ஆதரவின்மையால் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். மீதமுள்ள உழைப்பையும், வளத்தையும் சுரண்ட துடிக்கிறார்கள்.

எம்பி ஜோதிமணி
எம்பி ஜோதிமணி

தமிழ்நாட்டை தங்களது நாசகார அரசியலுக்காக துண்டாடத்துடிக்கும் துரோகிகள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழ்நாடு அடையாளம் கண்டுகொள்ளும். தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே அதற்கு சாட்சி. கொங்கு மண்டலத்திலும் பாஜக கூட்டணி பட்ட அடி சாதாரணமானதல்ல.

தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவின் தொன்மையான, வரலாற்றுச் சிறப்புமிக்க பல இனங்களை பாஜக; ஆர்எஸ்எஸ் குறிவைக்கிறது. தடுப்பூசி முதல் நீட் தேர்வு வரை தமிழ்நாட்டிற்கு மோடி அரசு இழைத்திருக்கும் துரோகம் கொஞ்சநஞ்சமல்ல. ஒற்றுமையான, வலிமையான தமிழ்நாடே உறுதியோடு இந்த அழிவுசக்திகளை எதிர்கொள்ள முடியும்.

பாஜக மீது குற்றச்சாட்டு
பாஜக மீது குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை ஏன் குறிவைக்க வேண்டும்?

உத்தரப் பிரதேச மாநிலம் தமிழ்நாட்டை விட 2.7 மடங்கு மக்கள் தொகை கொண்டது. அதை நான்காக பிரிக்கவேண்டும் என்று உ.பி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் மத்தியிலும் கோரிக்கை வலுக்கிறது. பாஜக ஆட்சி நடக்கிற தேவையுள்ள அந்த மாநிலத்தை பாஜக ஆட்சி பிரிக்கலாமே. தமிழ்நாட்டை ஏன் குறிவைக்க வேண்டும்?

பாஜக; ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு, சூழ்ச்சிக்கு, துரோகத்திற்கு அடிபணிய தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியினர் என்பதை பிரிவினைவாத பாஜகவினர் நினைவில் கொள்ளவேண்டும்.

பாஜகவின் அதிகாரவெறி

கொங்கு மண்டலத்திற்கு இன்றைய தேவை மோடி ஆட்சியில் உருக்குலைந்த தொழில்கள், வேலைவாய்புகள் உடனடியாக மறு உருவாக்கம் செய்யப்படவேண்டும். தமிழ்நாடு முழுவதுவே சிறு குறு நடுத்தர தொழில்கள் அழிந்து கிடக்கின்றன. ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் இடமுண்டு.

பிரிவினைக்கும் துரோகத்திற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை. ஒரு மாநிலம் பிரிக்கப்பட வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். பாஜகவின் அதிகாரவெறி அரசியல் முடிவுசெய்ய முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கொங்கு நாட்டுக்கு குறி: திமுகவில் ஐக்கியமாகும் தோப்பு வெங்கடாசலம்

Last Updated : Jul 11, 2021, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.