ETV Bharat / state

'எனது வீடு எப்பொழுதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்..!' - ஜோதிமணி உருக்கம்

கரூர்: "எனக்கு அனைவரும் சமம். எனது வீடு எப்பொழுதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்" என்று தேர்தல் பரப்புரையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உருக்கமாக பேசினார்.

காங்கிரஸ் ஜோதிமணி பரப்புரை
author img

By

Published : Apr 11, 2019, 2:48 PM IST

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி, புன்னம்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புன்னம்சத்திரம் கடைவீதியில் சாலையில் இறங்கி வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசுகையில், "பத்தாண்டுகள் கரூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர், தண்ணீர் பிரச்னையை தீர்க்கவில்லை. அதனால்தான் மக்கள் குடங்களுடன் தம்பிதுரையை முற்றுகையிடுகின்றனர். நானும் ஒரு பொண்ணு என்பதால், தண்ணீருக்காக அலையும் கஷ்டம் எனக்கு தெரியும்.

எனது பூர்வீக வீட்டை தவிர மற்ற சொத்துக்கள் எனக்கு கிடையாது. வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளுக்கு பின்பும் இதே சொத்துக்கள் மட்டுமே இருக்கும். அதனால் என்னை நம்பி நீங்கள் வாக்களிக்கலாம். நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். எனக்கு அனைவரும் சமம். அதலால் எனது வீடு எப்பொழுதும் திறந்தே இருக்கும். நீங்கள் போய் அதிமுகவினர் வீட்டுக்கு சென்று கை சின்னத்தில் எனக்காக வாக்கு கேளுங்கள்" என்றார்.

ஜோதிமணி பரப்புரை

Intro:பொதுமக்களிடம் அதிமுகவினர் வீட்டுக்கு சென்று கை சின்னத்தில் வாக்கு கேளுங்கள்- காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

Body:கரூர் நாடாளுமன்ற தொகுதி பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி பலமா புன்னம்சத்திரம் குப்பம் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் அவருடன் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி உடன் இருக்கிறார்.

கரூர் புன்னம்சத்திரம் கடைவீதியில் சாலையில் இறங்கி வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார் பின்னர் அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ஜோதிமணிக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் குறிப்பாக பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் கவர்ந்து வரும் வேட்பாளராக கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நெருங்கி பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பரமத்தி ஒன்று அதில் இருக்க கூடிய பல பகுதிகளில் தண்ணீர் பிரச்சனை இருக்கிறது அதனை சரி செய்ய பல திட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன விவசாய கடன் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
பத்தாண்டுகள் கரூர் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்கள் கரூர் நாடாளுமன்றத்திற்கு தண்ணீர் பிரச்சினை உடைய பூர்த்தி செய்யவில்லை அதனால் தான் மக்கள் குடங்களுடன் தம்பிதுரையை முற்றுகையிடுகின்றனர் நானும் ஒரு பொண்ணு என்பதால் தன்னுடைய கஷ்டம் எனக்கு தெரியும்.

மேலும் வேட்பாளரின் சொத்து கணக்கில் எனக்கு இருந்த எனது பூர்வீக வீட்டை தவிர மற்ற சொத்துக்கள் எனக்கு கிடையாது இருப்பினும் ஐந்து வருடங்களுக்கு பின்பும் அதே சுற்றுகள் மட்டுமே இருக்கும் அதனால் என்னை நம்பி நீங்கள் வாக்களிக்கலாம் நான் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.

மேலும் எனக்கு அனைவரும் சமம் ஆதலால் எனது வீடு எப்பொழுதும் திறந்தே இருக்கும் நீங்கள் போய் அதிமுகவினர் வீட்டுக்கு சென்று கை சின்னத்தில் எனக்காக வாக்கு கேளுங்கள் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.