ETV Bharat / state

கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் கட்சிகளிடையே போட்டா போட்டி - karur corona virus relief

கரூர் மாவட்டத்தில் அதிமுகவினரும், திமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வாரி வழங்கிவருகின்றனர்.

dmk
dmk
author img

By

Published : Apr 24, 2020, 11:08 AM IST

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த ஒரு மாதத்திற்கும்மேல் அமலில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். கட்சிகள் சார்பில் மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கப்படுகிறது.

அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் அதிமுகவினரும், திமுகவினரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வாரி வழங்கிவருகின்றனர்.

கரூரில் கரோனா வைரஸ் நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் அரசுக்கு காலதாமதம் ஆனதால், திமுகவைச் சேர்ந்த அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாது கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கிவருகின்றார்.

கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் கட்சிகளிடையே போட்டாபோட்டி

இதனால் கரூர் மாவட்டத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் அதிமுக, திமுக இடையே போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றன.

அதிமுக கட்சியினர் சார்பாக கரோனா வைரஸ் நிவாரண பொருள்களான அரிசி, எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படுகிறது. திமுக சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய், புளி, மிளகாய், வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் வழங்கப்படுகின்றன.

இதையும் படிங்க:கோவில்பட்டி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கிய திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.