கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமொழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அம்மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நடுநிலைப்பள்ளியில் தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட வகுப்பறை வசதிகள், ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றைப் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும், அரசுப் ள்ளி மாணவர்களுக்கு இது போன்ற நவீன வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்த அனைவரையும் அன்பழகன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் லியாகத், வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.