கரூர் மாவட்ட தொல்லியல் துறை சார்பில் பழைய திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியத்தில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த ஓவியப் போட்டி மாநிலம் முழுவதும் உள்ள அரசு அருங்காட்சியத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றப் போட்டியில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பார்வையற்றோர் மகிழட்டும்! - கண்தானம் செய்ய வலியுறுத்தும் ஓவிய கண்காட்சி