ETV Bharat / state

ஆம்புலன்ஸில் பிரசவம்: ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண் - ஆம்புலன்ஸில் பிரசவம்

கரூரில் பிரசவ வலியால் துடித்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே, மருத்துவ ஊழியர் உதவியால் அப்பெண் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

108-ambulance birth child delivery
ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்
author img

By

Published : Jul 10, 2021, 7:39 PM IST

கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அந்தரப்பட்டியை சேர்ந்த அபிநயா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர பிரசவ வலி ஏற்பட்டவுடன், மருத்துவ குழுவினர் அறிவுரையின் பெயரில் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பிவைக்கப்பட்டார்.

கரூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள மணவாசி சுங்கசாவடி அருகே வந்தபோது, பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை ஓரமாக நிறுத்தி, ஆம்புலன்ஸிலேயே மருத்துவ உதவியாளர் கோவிலன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும், சேயும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மணிவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் கோவிலனுக்கு கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் செவிலியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸில் குவா... குவா...! பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.