கரூர்: தாந்தோன்றிமலை அருகே முத்துலாடம்பட்டி முல்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ரமேஷ் (36). இவர் பணி நிமித்தமாக அக்டோபர் 13ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது