ETV Bharat / state

ஏழைக் குழந்தைகளுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதம் - அண்ணாமலை

author img

By

Published : Jun 29, 2021, 8:59 AM IST

நீட் தேர்வு வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக உள்ளதாகவும், அது ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் என்றும் மாநில பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

BJP state vice president annamalai
மாநில பாஜக துணை தலைவர் அண்ணாமலை

கரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி தலைமையில் நேற்று (ஜூன்.28) நடந்தது.

நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி
நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

பெட்ரோல் விலையில் மாறுபாடு

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநில பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 'திமுக பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துவிட்டு, அமைதி காக்கிறது. தமிழ்நாடு நிதியமைச்சரிடம் கேட்டால், எப்போது குறைப்போம் என நேரம் தெரிவிக்கவில்லை என அலட்சியமாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான வருவாயை 37 ரூபாய் முதல் 39 ரூபாய் வரை ஒவ்வொரு மாநிலங்களும் உயர்த்தியுள்ளன. விலை உயர்வைக் கணக்கில்கொண்டு மற்ற மாநிலங்கள் விலையைக் குறைத்துள்ளபோது, ஏன் தமிழ்நாடு அரசு வரியைக் குறைக்க முன்வரவில்லை. மக்களுடைய எண்ணங்களை தமிழ்நாடு அரசு அவமதித்து வருகிறது.

பெட்ரோல் விலையில் அரசியல்

தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் ஒன்றிய அரசு புதிய இடங்களில் பெட்ரோல் இறக்குமதி மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை அரசியல் ஆக்காமல், மக்களின் சிரமங்களை உணர்ந்து மாநில அரசு வரியைக் குறைக்க வேண்டும்.

மாநில பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி

காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலையை ஈடுகட்ட மன்மோகன் சிங், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோர் ஆயில் மார்க்கெட்டிங் பாண்ட் (OMB) முறையில் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டினர்.

அப்போது திரட்டப்பட்ட பத்திரங்களுக்கான அசல் மற்றும் வட்டித்தொகையினை ஒன்றிய அரசு இன்றைய நாள் வரை செலுத்தி வருகிறது.

இதற்காக, ஒன்றிய அரசு மக்கள் வரிப்பணத்திலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலுத்துகிறது. எனவே, ஒன்றிய அரசு வரியைக் குறைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

பாஜக ஆட்சியில் இருக்கும்போது, இல்லாதபோதும் தன் நிலைப்பாட்டில், கொள்கையில் உறுதியாக உள்ளது.

மும்மொழிக் கொள்கை

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை வேண்டும்; இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏழைக் குழந்தைகளுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம்.

நீட் தேர்வு ரத்து

குறிப்பாக தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறினார்கள்.

பிறகு 15 நாட்கள் கழித்து நீட் தேர்வு இருக்காது; ஆனால் படியுங்கள் என்றார்கள். தற்போது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகுங்கள் எனக் கூறுவதால் குழப்பத்தில் மாணவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

அரசியலமைப்புச் சட்டத்தில் நீட் தேர்வை நீர்த்துப்போக செய்ய முடியாது என்று தெரிந்தும், தேர்தல் ஆதாயத்திற்காக திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.

அதுபோல திமுக தெரிவித்துள்ள பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததுதான்' எனப் பேசி முடித்தார்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் பட்டுசேலை வாங்க படையெடுத்த மக்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.