ETV Bharat / state

பிரதமர் மோடி பிறந்தநாள் சுவர் விளம்பரம்: திமுக, பாஜகவினரிடையே தகராறு! - கரூரில் திமுக, பாஜகவினரிடையே சுவர் விளம்பர பிரச்சனை

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் சுவர் விளம்பரம் தொடர்பான அரசியல் பிரச்சினை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல் கரூரில் பாஜக, திமுகவினருக்கு இடையே சுவர் விளம்பரம் தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பிரதமர் மோடி பிறந்தநாள் சுவர் விளம்பரம் தொடர்பான பிரச்சனை

author img

By

Published : Apr 16, 2022, 10:18 PM IST

Updated : Apr 16, 2022, 10:26 PM IST

கரூர்: கரூர் மாவட்ட பாஜக சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சுவர் விளம்பரங்கள் மாவட்ட தலைவர் வி்.வி.செந்தில்நாதன் ஏற்பாட்டில் வடக்கு மத்திய நகர பொறுப்பாளர்கள் கரூர் நகர் பகுதி முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கரூர் சர்ஜ் கார்னர் அருகே சுவர் விளம்பரம் தொடர்பாக பாஜக, திமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக கரூர் எஸ்பி அலுவலகத்தில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் புகார் மனு ஒன்றை அளித்தார்.

பிரதமர் மோடி பிறந்தநாள் சுவர் விளம்பரம் தொடர்பான பிரச்சனை

ஆளுநரை சந்தித்து மனு: இந்தநிலையில், இன்று (ஏப்ரல்16) கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் இருந்து செல்லும் பழைய திண்டுக்கல் சாலையில் எஸ்பிஐ வங்கி எதிர்புறம் அமைந்துள்ள சுவர் ஒன்றில் வரையப்பட்டிருந்த பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து சுவர் விளம்பரம் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சுவர் உரிமையாளர் திமுகவினரின் நிர்பந்தத்தின் பேரில் சுவர் விளம்பரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், "அண்மையில், ஊராட்சி அலுவலகம் ஒன்றில் பிரதமர் மோடியின் படத்தை அகற்றக்கோரி திமுகவினர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறித்தும் தற்போது சுவர் விளம்பரம் தொடர்பான பிரச்சனை குறித்தும் பாஜக தலைமைக்கு தகவல் தெரிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் கரூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதிலும் நடவடிக்கை இல்லையென்றால் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து மனு அளிக்கபடும்" என்று தெரிவித்தார். சுவர் விளம்பரம் தொடர்பான பிரச்சனை கரூரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரத்தில் பிரமாண்ட ஹனுமன் சிலை- பிரதமர் அலுவலகம் தகவல்!

Last Updated : Apr 16, 2022, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.