ETV Bharat / state

விவசாயிகளை அழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்துவருகிறது - ராகுல் காந்தி - Rahul Gandhi in karur

கரூர்: விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்துவருகிறது என கரூரில் விவசாயிகளுடனான சந்திப்பின்போது ராகுல் காந்தி தெரிவித்தார்.

கரூர்
கரூர்
author img

By

Published : Jan 25, 2021, 7:17 PM IST

Updated : Jan 25, 2021, 8:43 PM IST

கரூர் மாவட்டத்திற்கு இன்று (ஜன.25) வருகை தந்த ராகுல் காந்தி கரூர் அருகே வாங்கல் மாரிகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள விவசாய தென்னந்தோப்பு பகுதியில் விவசாயிகளுடன் சந்திப்பு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அங்கு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்துவருகிறது. மோடியின் ஆட்சிக் காலத்தில் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் மிகக்கடினமாக உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் கைகுலுக்கிய ராகுல் காந்தி
விவசாயிகளுடன் கைகுலுக்கிய ராகுல் காந்தி

டெல்லியில் தற்போது நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம் அதில் உள்ள கஷ்டங்களை நான் உங்களிடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். புதிய வேளாண் சட்டத்திருத்தங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் நிறுவனம், பணத்தை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை எனில் விவசாயிகள் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது.

கரூரில் ராகுல் காந்தி பரப்புரை

இரண்டாவது, மண்டி என்ற அமைப்பையே ஒழிக்கவேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மூன்றாவது பணம் இருப்பவர்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக்கொள்ளலாம் போன்ற மூன்று அம்சங்கள் வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன. நாம் உண்ணும் உணவுக்கு கூட அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஜிஎஸ்டி ஆல் உருவாகியுள்ளது என்றார்.

மாட்டு வண்டியில் பரப்புரை செய்த ராகுல் காந்தி
கரூர் எம்பி ஜோதிமணி மாட்டு வண்டி ஓட்ட, அதில் பயணம் செய்து பரப்புரை செய்த ராகுல் காந்தி!

தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். அப்பொழுது 100 நாள் வேலை திட்டம் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதுவும் வறுமையில் இருக்கக்கூடியவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வந்தது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி தெரிவித்தார்.

இதையும் படிங்க:'தமிழில் பேசி பிரதமர் மோடி ஏமாற்றுகிறார்' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Last Updated : Jan 25, 2021, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.