ETV Bharat / state

கரோனா 3ஆம் அலையை தடுக்க கரோனா வாரியர்கள் தயார்- பாஜக கூட்டத்தில் தீர்மானம் - karur bjp pass resolution

கரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு பாஜக மாநிலத் தலைமை அறிவுறுத்தலின்படி கரோனா வாரியர்ஸ் எனும் தன்னார்வ குழு தயார் நிலையில் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

bjp-corona-warriors-ready-for-face-3rd-wave-karur-bjp-pass-resolution
கரோனா 3ஆம் அலையை தடுக்க கரோனா வாரியர்கள் தயார்- பாஜக கூட்டத்தில் தீர்மானம்
author img

By

Published : Jul 12, 2021, 8:52 AM IST

கரூர்: தாந்தோன்றிமலை அடுத்த ராயனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு பாஜக மாநிலத் தலைமை அறிவுறுத்தலின்படி கரோனா வாரியர்ஸ் எனும் தன்னார்வ குழு தயார் நிலையில் உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 10 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. அணில்களால் மின்தடை ஏற்படுகிறது எனக்கூறுவது நகைப்பாக உள்ளது.

பஸ் நிலையங்கள், மார்க்கெட், கோயில், பள்ளிக்கூடம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் இல்லாவிட்டால், பாஜக மகளிர் அணி சார்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றிய இணையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல்.முருகன், தமிழ்நாடு பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழ்நாடு மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நிர்வகிக்க கூடிய இரண்டு துறை சார்ந்த தீர்மானங்கள் கரூர் மாவட்ட பாஜக நிறைவேற்றி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொங்கு நாடு பிரிக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு - கார்த்தியாயினி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.