ETV Bharat / state

’திமுகவினரின் அட்டூழியம் இன்னும் 15 நாள்களுக்குதான்’ - அண்ணாமலை - annamalai nomination

கரூர்: திமுகவினரின் அட்டூழியம் இன்னும் பதினைந்து நாள்கள் தான் செல்லுபடியாகுமென பாஜக மாநில துணைத் தலைவரும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி
அண்ணாமலை
author img

By

Published : Mar 21, 2021, 10:26 AM IST

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரூர் ஊராட்சி ஒன்றியம் புஞ்சைபுகலூர் கிராமத்தில், நேற்று (மார்ச்.20) தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அங்குள்ள மேகபாலீஸ்வரர் சிவாலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "சென்னையிலிருந்து வந்துள்ள திமுக வழக்கறிஞர் பிரிவு, சுயேச்சையாக மனு தாக்கல் செய்துவிட்டு என் மீது வழக்கு உள்ளது என்கின்றனர். படிக்காத முட்டாள்களைப் போல திமுகவினர் பேசி வருகின்றனர். என் மீது என்ன திமுகவினர் போல கற்பழிப்பு, கொலை, ஊழல் வழக்கா உள்ளது?

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும். அதற்கான வெளிப்பாடுதான் இது. பாஜக வேட்பாளர் எங்கு செல்கிறார், என்ன பேசுகிறார், யாரை சந்திக்கிறார், இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியில் என்ன பேசுகிறார் என, தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பதுதான் இவர்களின் வேலை. திமுகவினருக்கு பரப்புரை செய்ய ஏதும் இல்லாததால் இதை வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுகவின் அட்டூழியம் இன்னும் 15 நாள்களுக்குதான். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி ஒரு விஷப்பாம்பு! - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.